பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் 'தீபம்' நா.பார்த்தசாரதி } இருக்கிறது. ஐந்துக்கு மேற்பட்ட உதவியாசிரியர்களும் - ஓர் இணையாசிரியரும் உள்ள தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றில் - அந்த பத்திரிகைக்கு வேண்டிய் கதைகள் - தொடர்கதைகள் - சித்திரவதைகள் (அதாவது சித்திர தொடர் கதைகள்) எல்லா வற்றையும் தீர்மானம் பண்ணுகிற பொறுப்பு-அந்தக் காரியாலய முதலாளியின் காதலுக்குப் பாத்திரரான இளம் சர்க்குலேஷன் மானேஜரிடம் இருக்கிறது. அனுபவமும் முதுமையும் நிறைந்த அந்தக் காரியாலய உதவியாசிரியர்களெல்லாம் முளைத்து மூன்று இலை போடாத இந்த சர்க்குலேஷன் மானேஜருக்கு "சலாம் போட்டுப்பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது. இந்த சர்க்குலேஷன் மானேஜரைத் தட்டிக் கொடுத்து, ' இவன் தான் என் உயிர். நான் வெறும் உடம்பு என்பது போல் எல்லார் முன்னிலையிலும் அந்த முதலாளி பாராட்டுவதால், எல்லாரும் அந்த சர்க்குலேஷன் மானேஜருக்கு அடிமைகளாகி விடுகிறார் கள். இலட்சம் இலட்சமாகத் தமிழ் வாரப் பத்திரிகைகளை வாங்கும் தமிழ் வாசகர்களுக்கு இன்னும் சில் உண்மைகளை இங்கே நான் சொல்லியாக வேண்டும். கோபுரத்தின் மேலேறி நின்று அஷ்டாங்க மந்திரத்தைச்சொன்ன போது அந்த வரம்பை மீறியதற்காக எத்தனை பெருமிதத்தை ராமானுஜர் அடைந்திருப் பாரோ அத்தனை பெருமிதத்தை இந்த அபவாதத்தை வெளியிடுகிற நானும் அடைய முடியுமென்றே எனக்குத் தோன்றுகிறது. - - ஒர் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் நான்கு புறமும் கோபுரங்கள் நிமிர்ந்து நிற்கின்ற எங்கள் அழகிய மதுரையிலே நான் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பி.ஓ.எல். பட்டப்படிப்புக்காகத் தனியே படித்துக் கொண்டு மிருந்தேன். அந்தச் சமயத்தில் சென்னையைச் சேர்ந்த வாரப் பத்திரிகை முதலாளி ஆசிரியர்ஒருவர்என்எழுத்துத் திறமையால் கவரப்பட்டோ, அல்லது என் எழுத்துத் திறமைக்கு பொங்கல் வைத்து என்னைத் தீர்க்க: - அது தான் சமயமென்று முடிவு செய்தோ, என் வீடு தேடி வந்தார். அப்போதுஅவரோடு உடன் வந்தவர் நாவலர் சோமசுந்தரபாரதியாரின் மருமகனும்-பிரபல வழக்கறிஞருமான திரு.எல். கிருஷ்ணசாமி பாரதி என்பதாக ஞாபகமிருக்கிறது எனக்கு. மதுரையே அதிகம் பழகிய என் தாய்க்கும், தந்தைக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் - நான்