பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்'த' பார்த்தசாரதி) செய்தாயிற்று. இதற்கிடையில் ஒரு நல்ல பண்டிகை தினம்(ஆவணிய விட்டத்திற்கு மறுநாளென்று நினைவு) பகலில் மேற்படி பத்திரிகைக்காரரிடமிருந்து ஒரு முக்கியமான காரியமாக உடன் சென்னை வருமாறு டிரங்க் டெலிபோனில்:தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் அழுத்தம், அது எனக்குத் தெரிவிக்கப்பட்ட வேகம் , அதை தெரிவித்த விதம் எல்லாம் மிகமிகப் பிரமாதமாயிருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மதுரையைச் சேர்ந்த எளிய இலக்கியத் தொழிலாளியாகிய நான் அன்று பகலில் அந்த ஒரு விநாடியில் கொஞ்சம் ஏமாந்து போனேன் போலிருக்கிறது. ஆனால் அன்று அப்படி மனம் நலிந்து போய் வரவில்லையானாலும் பணத் திமிங்கலங்களின் கைகளில் புனிதமான பத்திரிகை தொழில் படும் பாட்டைப் பற்றி நான் அதிகம் தெரிந்துகொள்ள முடியாமலும் போயிருக்கும். தொழில் என்கிற சுயலாபத்துக் காக எந்தெந்தக் குறைவான காரியங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், எப்படி எப்படித் தொடங்கி எப்படியெப்படி நம்பிக்கைத் துரோகங்களைப் புரிவார்கள என்பதையும் இந்தப்பட்டினத்துக்கு வரவில்லையானால் நான தெரிந்து கொண்டிருக்க முடியாமலே போயிருக்கும். இவர் களுடைய பத்திரிகை என்கிற காகிதம் இலக்கிய சேவை புரியாததோடு இவர்களிடமுள்ள ஊழியர்களின் வேதனையைவாசகர்களுக்கு மறைக்கவும் வாசகர்களுக்கும் பத்திரிகையின் உயிர்நாடியான எழுத்தை உருவாக்குகிறவர்களுக்கும் நடுவே ஒரு நிரந்தர மறைப்பாகவே இருக்கவும் பயன்படுகின்றதென் பதையும் தெரிந்து கொண்டேன். ஒரு பத்திரிகையின் உள்ளே என்ன அநியாயம் நடந்தாலும் வெளியே அதைப் பற்றி அறிய அக்கறையோ உணர்வோ இன்றி என்றும் போல் அந்தப் பத்திரிகையை வாங்கி ஆதரிக்கும் பெரு மக்கள் இருக்கும் போது முதலாளிகள் ஏன் கவலைப்படப் போகிறார்கள். ஓர் எழுத்தாளன் பழிவாங்கப்பட்டால் சக எழத்தாளர்களும் பதுங்கி ஒடி ஒளிகிறார்கள். . . . . வாசகர்களும் ஏனோதானோ என்று இருந்து விடுகிறார் கள். தமிழ்ப் பத்திரிகை முதலாளிகளுக்கு இது ஒரு பெரிய செளகரியமான சூழ்நிலையாக இருக்கிறது. இன்று வரை அப்படித்தான் இருக்கிறது. புத்தியின் நஷ்டம் அவர்களைப் பாதிப்பதே இல்லை. பணத்தைக் காட்டி புத்தியை அடகு