பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

எழு பெரு வள்ளல்கள்

துமே பாரியின் மறைவுக்காகப் புலம்பியது. கபிலர் வெளியூரிலிருந்து ஓடி வந்தார். உயிருடன் தம் நண்பனைக் காண முடியாததற்காக அடித்துக்கொண்டு அழுதார். தாமும் உலக வாழ்வை நீத்துவிடவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனாச் பாரியின் மகளிர் இருவரையும் தக்க இடத்தில் மனம் செய்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் அவ்வாறு செய்யவில்லை.

பாரி மறைந்த பிறகு பகை மன்னர் அவன் நாட்டைக் கைப்பற்றத் தொடங்கினர். அதனை அறிந்த கபிலர் அங்கவை, சங்கவை என்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டுவிட்டார். சில வேளிர்களிடம் சென்று அப்பெண்களை மணம் புரிந்துவ்கொள்ளும்படி கேட்டார். பல காரணங்களால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். கடைசியில் மனம் வெறுத்துப்போன அச்சான்றோர் இரண்டு பெண்களையும் ஒரு நல்ல குடும்பத்தில் அடைக்கலமாக ஒப்பித்துவிட்டு, ஒருவரும் அறியாமல் பெண்ணையாற்றங்கரையில் பட்டினி கிடந்து உயிர் நீத்தார்.

சில நாட்களுக்குப் பின்பு தமிழ்ப் புலமையிற் சிறந்த மூதாட்டியாகிய ஒளவையார் அப்பெண்கள் இருக்குமிடத்தை அறிந்து, மலையமான் திருமுடிக்காரியின் மரபில் வந்த ஒருவனுக்கு அவர்களை மணம் முடித்துவைத்தார். .