பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதிகமான்

தருமபுரி என்று கேட்டிருக்கிறீர்களா? சேலம் மாவட்டத்தில் உள்ள ஊர் அது. அந்தப் பேர் பிற்காலத்தில் வந்தது. அந்தக் காலத்தில் அதற்குத் தகடூர் என்று பேர் வழங்கியது. இப்போது தருமபுரிக்கருகில் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. அது முன் காலத்தில் தகடூரைச் சேர்ந்ததாக இருந்தது. அந்தக் கோட்டையை நடுவிலே பெற்று, நாற்புறமும் விரிவாகவும் அழகாகவும் அமைந்திருந்தது பழைய காலத்துத் தகடூர்.

அதைத் தன் அரசாட்சிக்குரிய தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். அதிகர் என்றும் அதியர் என்றும் அவலுடைய குலத்தோரை அறிஞர்கள் குறிப்பார்கள். அந்தக் குலத்தில் உதித்தவன் நெடுமான் அஞ்சி. அதில் தோன்றிய பலருக்குள்ளே அவனே இணையில்லாத புகழ் பெற்றவ தைலின், அதிகமான் என்றால் அவனையே குறிக்கும்படி ஆகிவிட்டது.

அதிகர் குலத்தின் முதல்வன் சேரர் குலத்தில் உதித்தவன். மிகப் பழங்காலத்திலேயே அதிகமானுடைய முன்னோர்கள் அக்குலத்திலிருந்து தனிக் கிளையாகப் பிரிந்து தனியே நாடாளும் உரிமையை மேற்கொண்டிருந்தார்கள். சேரர்களைப் போல முடியுடை மன்னர்களாக விளங்காவிட்டாலும் அவர்களுக்குரிய பனைமாலையை அணிந்து கொண்