பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகமான்

35

இறைவனை வணங்கி ஓர் இருக்கையில் சென்று அமர்ந்தான். நெல்லிக் கனியை ஒரு பொற்றட்டில் ஒரு மங்கை ஏந்தி அவனிடம் கொண்டு வந்தாள்.

அந்தச் சமயத்தில் ஒளவையார் அங்கே வந்து சேர்ந்தார். அவரை வரவேற்றான் அதிகமான். அந்த இளம் பெண் நெல்லிக் கனியை ஏந்திக்கொண்டு அருகில் நின்றாள். ஒளவையார் நல்ல வெயிலில் நடந்து வந்திருந்தார். "என்ன கடுமையான வெயில்!" என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார். உடனே ஒருவர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அதை அருந்திய அவர் அந்த இளம் பெண் கையில் பொன் தட்டை ஏந்திக் கொண்டு நிற்பதைக் கண்டார்.