பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
எழு பெரு வள்ளல்கள்

"என்ன அது?" என்று கேட்டார் ஒளவையார்.

"நெல்லிக் கனி" என்று அதிகமான் கூறினான்.

"நெல்லிக் கணியா? இந்த வெயில் காலத்தில் தாகம் தீர்க்க உதவுவதல்லவா அது? நான் வரும் வழியில் ஒரு நெல்லிக்காயாவது கிடைக்காதா என்று ஏங்கினேன். நாக்கு அப்படி வறட்டியது."

"அப்படியா? இந்த நெல்லிக் கனியை உண்ணலாமே!” என்றான் அதிகன்.

அருகில் இருந்தவர்கள் துணுக்குற்றார்கள். ஒளவையார் அதைக் கவனிக்கவில்லை. அதிகமான் கூறியதற்கு, "உண்ணலாம்'"என்று விடை கூறினார். அதிகமான் மறு பேச்சுப் பேசவில்லை. தட்டில் இருந்த நெல்லிக்கனியை எடுத்தான். ஒளவையாரின் கையிலே கொடுத்தான். அவர் அதை வாயிலிட்டுத் தின்னத் தொடங்கினார்.

அங்கே இருந்தவர்களுடைய உள்ளத்தில் எத்தனையோ விதமான எண்ணங்கள் எழுந்தன. 'இவள் எங்கேயடா இப்போது வந்து சேர்ந்தாள்!' என்று சிலர் பல்லைக் கடித்தார்கள். 'இவன் இதன் அருமையைச் சொல்லாமல் இப்படிச் செய்யலாமா?' என்று அவன் மீது சினம் கொண்டார்கள்.

"நெல்லிக் கனி ஒரு புதிய சுவையுடன் இருக்கிறதே! இது போன்றதொன்றை நான் கண்டதே இல்லை” என்று ஒளவையார் மென்று கொண்டே சொன்னர்.

"ஆமாம்; இது புதிய கணிதான்" என்றான் அதிகமான்.

அதற்குள் அங்கே அமர்ந்திருந்த பெரியவர் ஒருவருக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை. "நம் அரசனுக்