பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

எழு பெரு வள்ளல்கள்

தளிரைக் கோதி இன்புற்றுப் பாடும்போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அப்படி இசைவாணர்கள் மனம் குளிர்ந்து தாமாகவே பாடும்போது வருவது தான் இனிய பாட்டு. அதைக் கேட்பதற்கு எவ்வளவு காலமாயினும் காத்திருக்கலாம்" என்பான்.

வந்த பாணர்கள் பல காலம் வறுமையிலே வாடினவர்களாதலின் இங்கே கிடைக்கும் விருந்துணவை ஆவல் தீர உண்பார்கள்; அளவுக்கு மிஞ்சி உண்பார் கள். அதனால் உண்டான களைப்பை ஆற்றிக்கொள்வார்கள்; உறங்குவார்கள். இப்படி உண்பதும் உறங்குவதுமாகப் போது கழியுமே யொழியப் பாடுவதோ ஆடுவதோ அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையை வன்பரணர் எடுத்துக் கூறினார்.

இப்படிக் கொடையாளியாக வாழ்ந்த ஓரியின் கொல்லிக் கூற்றத்தின்மேல் கணவைத்தான் சேரமான், அதனை அறிந்து காரி படையெடுத்து வந்தான். ஓரியென்னும் தன் குதிரையில் ஏறிப் போராடினன் ஓரி, போர் செய்வதையே தம் வாழ்க்கைத் தொழிலாகவுடைய காரியின் படைவீரர்களின் முன் ஓரியின் படை நிற்க முடியவில்லை. காரியின் வாளுக்கு அவன் இரையானான். கொல்லிக் கூற்றத்து மக்கள் அவனுடைய அருங்குணங்களில் ஈடுபட்டவர்க ளாதலின் அவன் இறந்ததற்காக மிகவும் வருந்தினார்கள். வெற்றி பெற்ற காரி அந்த நாட்டின் தலைநகர் வழியே சென்ற போது ஊரில் இருந்த மக்களெல்லாம் அவனை எள்ளி இரைந்தனர். இதைப் பரணர் என்ற புலவர் ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்.

ஓரி போர்க்களத்தில் வீழ்ந்தாலும் ஏழு வள்ளல்களில் ஒருவகை இலக்கியங்களில் வீழாமல் நிற்கிறான்.