உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நள்ளி

61

டார்கள். அவன் அருகில் இருந்த அருவியிலிருந்து நீர் கொண்டு வந்து அளித்தான். அதைக் குடித்துத் தாகம் போக்கிக் கொண்டார்கள்.

புலவன் அந்த வீரனிடம் விடை பெற்றுக் கொண்டான். அப்போது அவன், "உங்களைப் பார்த்தால் புலவரைப் போல இருக்கிறது. உங்களுக்கு மன்னர்கள் தக்க பரிசில்களை வழங்குவார்கள். காட்டு வாசிகளாகிய எங்களிடம் உங்களுக்கு வழங்கும் அணிகலன் யாதும் இல்லை. என் செய்வது!" என்று சொல்லித் தன் மார்பில் அணிந்திருந்த சிறந்த முத்துமாலையைக் கழற்றினான், கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றினான். அவற்றைப் புலவன் கையில்