பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

த. கோவேந்தன்


 நாரதர்: எல்லாம் கற்றுக் கொண்டதாகச் சொல்கின்றாயே! சக்கரப் பிரயோகம் செய்ய அறிந்து கொண்டாயா!

சீமாலிகன்: (சற்றுப் பொறுத்து) நாரதரே! தக்க சமயத்தில் ஞாபகப்படுத்தினிர் கண்ணன் இந்தச் சீமாலிகனை ஏமாற்றத்தான் செய்துள்ளான். இதோ! இப்போதே சென்று அவனைக் கேட்கின்றேன்.

நாரதர்: சீமாலிகா! பதறாதே! வேண்டுமென்றே மறைத்த வித்தையை அவன் உனக்கு ஒரு போதும் கற்றுத் தரமாட்டான். வீணாசையை விடு!

சீமாலிகன்: நாரதரே! நான் சக்கரப் பிரயோக வித்தையைக் கற்றுக் கொள்கின்றேனா இல்லையா பாரும் சீமாலிகனிடம், கண்ணன் தப்ப முடியாது.

நாரதர்: கண்டிப்பாக நீ கற்க முடியாது. கற்றுக் கொள்ள முயன்றால் உனக்கு ஆபத்து நேரலாம். நாரதன் சொன்னது நடந்தே தீரும். போய் வருகின்றேன். நாராயண! நாராயண! நாரதர் போகின்றார்)

நாரதர்: (தனக்குள்) ஒவ்வொரு நாளும் ஒரு கலகம் ஏற்படுத்த வேண்டும் என்ற நியதிப்படி நேற்றும் இன்றும் இரண்டு கலகங்கள் ஏற்படுத்தி விட்டேன். சீமாலிகனுக்கு நான் கொடுத்த மருந்து, நன்றாக வேலை செய்யத் தொடங்கி விட்டது.

[திரை]


காட்சி-6
இடம்          :   கண்ணன் திருமாளிகை
காலம்         :   மாலை
பாத்திரங்கள்  : சீமாலிகன், கண்ணன், நாரதர்


(கண்ணன் அரியணையில் உள்ளான். சீமாலிகன் வருகின்றான். அவன் முகத்தில் கவலையும் வெறுப்பும் காணப்படுகின்றன)