பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

த. கோவேந்தன்



இறைவன் ஏறிய தோளில் இந்த ஏழைக் குரங்கு ஏறுவதா என்று பொருமினன் கருடன், ஆயினும் என்ன செய்வது? கண்ணன் கட்டளையை மீற முடியுமா?

நான் போகும் வேகத்தில் இந்தக் குரங்கு கீழே விழுந்து - நொறுங்கிப் போகுமே! என்று எண்ணியவாறே அனுமனைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டு பறந்தான் கருடன். “சே! சே! உன் வேகம் இவ்வளவு தானா? இராம-இலக்குவர் இருவரையும் தூக்கிக் கொண்டு நான் தாவிய வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உன்னிடம் இல்லையே! சஞ்சீவி மலையைப் பேர்த்துக் கொண்டு அரை நொடிக்குள் வந்தேனே! என்று கூறிக் கொண்டே அனுமன், கருடனை வேகப் படுத்தினான். வேகத்தால் களைத்துப் போனான் கருடன். களைத்துப் போன கருடனை அனுமன், தன் வாலில் கட்டி இழுத்துக் கொண்டு அரை நொடியில் தன் இருப்பிடத்தை அடைந்தான்.

அனுமனால் கருவம் குலைந்த கருடன், அனுமனை வணங்கி, வாணர வேந்தே! நான் தோற்றேன். என் கருவத்தைக் குலைத்து என் உள்ளத்தைத் தூய்மையாக்கி விட்டிர்கள். உங்களுக்குக் கோடி வணக்கம்" என்று கூறிவிட்டு மீண்டான்.