பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

த. கோவேந்தன்



பல் தேய்க்கும் குச்சி முழுப் பனைமரந்தானாம். இவ்வாறு பல செய்திகளை மக்கள் வியந்து பேசுவதை இன்றும் காணலாம்.

பெருந்தீனியனாக இருந்தாலும் வீமன் ஒழுக்கம் தவறாதவன். பக்தி நிரம்பியவன்.

ஆனால் பிறர் காணும்படி பூசை, அர்ச்சனை, தியானம் ஏதும் செய்யமாட்டான்.

அவன் பூசனை அனைத்தும் மானசீக பூசனையே.

பஞ்சவரும் நாட்டினரும் ஏகாதசிவிரதம் கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால் வீமனுக்கு எந்த விரதமும் ஒத்து வராது. ஏனெனில், விரதம் என்றால் பசி பொறுக்க வேண்டுமே!

வீமன் விரதம் கடைப்பிடிக்காமை கண்டு அர்ச்சுனன் முதலியோர் அவனை ஏளனம் செய்வதுண்டு.

உணவுண்ணவே நேரம் போதாது. அதனால் தான் வீமன் விரதம் கடைப்பிடிப்பதில்லை என்பது அவர்களின் ஏளனத்துக்குக் காரணம்

இதை உணர்ந்த வீமன் தானும் ஏகாதசி விரதம் இருந்தே தீருவது என்று முடிவு செய்தான்.

தங்கள் மூதாதையாகிய வியாச பகவானிடம் “நான் விரதம் இருக்க வேண்டும். அதன் விதிமுறைகள் யாவை?” என்று கேட்டு அறிந்து கொண்டான். “பசி பொறுக்க இயலாவிட்டால் என்ன செய்யலாம்?” என்பதனையும் மறக்காமல் கேட்டுக் கொண்டான்.

“பசி பொறுக்க இயலாவிடின், பால், பழம், கரும்பு முதலியவற்றை உண்ணலாம்” என்றார் வியாசர்.

ஏகாதசியன்று வீமன் விரதம் தொடங்கி விட்டான். இச்செய்தி கண்டு நாட்டுமக்களெல்லாம் வியப்பெய்தினர். “இவனாவது விரதம் இருப்பதாவது இடையிலே விரதத்தைக் கைவிட்டு விடுவான்” என்றும் சிலர் ஆருடம் கூறினர்.