பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

13




கண்ணன் செயலும் வாக்கும் அவன் கூறியருளிய பகவத் கீதையின் சாரமாக அமைந்தது என்று ஞானிகளாகிய சகாதேவன் முதலியோர் பாராட்டினர்.

கண்ணனுக்கு முதல்பூசை தந்தது எவ்வளவு தகுதியானது என்று எண்ணி எண்ணி இன்புற்றனர்.

இதைப்போன்ற ஒரு நிகழ்ச்சி காந்தியடிகள் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. அதை இங்கு ஒப்பிட்டுக் காண்பது பயனுடையதாக இருக்கும்.

அடிகள் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகச் சத்தியாக்கிரகம் என்னும் புதுமுறைப் போர் நிகழ்த்தி ஓரளவு வெற்றி கண்டு இந்தியர்க்குச் சில உரிமைகளைப் பெற்றுத் தந்துவிட்டு நம்நாட்டுக்கு மீண்டார்.

அவர்தம் செயற்கரிய செயல்கண்டு நம்நாட்டு மக்கள் மகாத்மா என்று பாராட்டினர். கண்ணபிரானின் மறு அவதாரம் என்று கொண்டாடினர்.

அடிகள் இந்தியா வந்த சமயம் காங்கிரசு மாநாடு நடந்தது. மாநாட்டில் காந்தியடிகளுக்கு அளவில்லாத பாராட்டும் மரியாதையும் தரப்பட்டன. தலைவர்கள் அனைவரும் அண்ணலின் ஆலோசனைப்படி நடப்போம் என்று உறுதி மொழி எடுத்தனர்.

மாநாடு தொடங்கியது. தலைவர் பலர் பேசினர். காந்தியடிகள் பேசவேண்டிய முறை வந்தது. காந்தியடிகள் எங்கே? மேடையில் காணோம். எங்கும் தேடலாயினர். தென்படவே இல்லை.

இறுதியில் கழிப்பிடப்பகுதியில் கையில் வாளியும் விளக்குமாறும் வைத்துக் கொண்டு கழிப்பிடத்து அழுக்குமலம் அள்ளி அள்ளித் தூரத்தே கொட்டிக் கொண்டிருக்கக் கண்டனர்.

"ஐயோ! இது என்ன காரியம் செய்கின்றீர்கள் மகாத்மா ஆகிய நீங்கள் கண் காட்டினால் கணக்கில்லாதவர் காரியம் செய்யக் காத்துள்ளனரே! நீங்கள் மேடையில் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. உடனே குளித்து உடை மாற்றிக் கொண்டு