பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

த. கோவேந்தன்



13. சகுனியின் சகேரதரர்கள்

துரியோதனன் தாய் காந்தாரி. அவள் காந்தார நாட்டு மன்னன் மகள். அவள் சகோதரன் சகுனி. சகுனியை அறியாதவர் ஒருவரும் இரார். பாண்டவர்களைச் சூதால் வென்று காட்டுக்கு அனுப்பிய அந்தக் கயவனை அறியாமல் இருக்க இயலுமா!

துரியோதனன் உடன் பிறந்தவர் நூறுபேர். ஆதலால் அவர்கள் ஈரைம்பதின்பர் என்றும் நூற்றுவர் என்றும் பெயர் பெற்றனர்.

இதைப் போலவே சகுனியின் உடன்பிறந்தவரும் நூற்றுவரே.

துரியோதனனுக்குத் தாய் மாமன்மாராகிய நூற்றுவரும் ஏதோ காரணத்தினால், அத்தினபுரத்திலேயே தங்கியிருந்தனர்.

அரண்மனையில் எந்நேரமும் சகுளி சகோதரர்கள் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டே இருப்பர்.

தாய்மாமன் முதலிய பெரியோர் யாராயிருப்பினும் மரியாதை செய்ய வேண்டிய வழக்கம் அந்நாளில் இருந்தது.

ஆதலால் இளவரசர்களாகிய துரியோதனன், துச்சாதனன் முதலியோர் உட்காரவே முடிவதில்லை. அலுத்துப் போய் வந்து, துரியோதனன் சற்றுச் சோர்ந்து அமர்வான். அப்போது யாரோ ஒரு மாமன் அவ்வழியே வந்து விடுவான். மாமனாயிற்றே மரியாதை தராமல் இருக்கலாமா? உடனே இருக்கை விட்டு எழுந்து வணக்கம் செலுத்துவான். அந்த மாமன் சென்று விட்டானே என்று அமர்ந்தால், வேறு ஒரு மாமன் வந்து விடுவான். உடனே எழ வேண்டும்.

யாருக்கும் வணங்கி அறியாத துரியோதனனுக்கு மாமன்மாரால் பெருந்துன்பம் நேர்ந்தது.

ஒரு நாள் மிகவும் சலித்துப் போன துரியோதனன், ஏதோ காரணம் சொல்லிச் சகுனி சகோதரர் நூற்றுவரையும் பிடித்துச்