பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

35


சிறையில் அடைத்து விட்டான். இப்போது அடிக்கடி எழுந்து மரியாதை செலுத்த வேண்டிய தொந்தரவு இராதல்லவா?

சிறைப்பட்ட மாமன்மார், நூற்றுவரையும் ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்தான் துரியோதனன்.

சிறையிலுள்ளார்க்கு உணவும் நீரும் தர வேண்டுமே! ஆளுக்கு ஒரு பருக்கை சோறும் ஒரு சின்ன நத்தைக் கூட்டில் நீரும் வேளைவேளைக்குத் தரும்படி ஏற்பாடு செய்தான். யாரும் கேட்டால், சோறும் நீரும் தருகின்றேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைவரையும் கொன்று விடலாம் என்பது துரியோதனன் சாதுரியம்.

நூற்றுவரில் மூத்தவனாகிய சகுனி சாமர்த்தியவான். தம்: தம்பியர் அனைவரையும் அழைத்து. “துரியோதனன் நம் அனைவரையும் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டான். நாம் அவனை அடியோடு அழித்துப் பழிக்குப் பழிவாங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு தந்திரம் செய்யவேண்டும்” என்றான்.

“அண்ணா! சகுனி! நீயே அறிவாளி அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உன் கடமை. நீ என்ன சொல்கின்றாயோ? அதை நாங்கள் அப்படியே செய்கின்றோம்” என்ற்னர் தம்பியர்.

“ஒரு பருக்கை சோறும் நத்தைக் கூட்டில் தரும் தண்ணீரும் உண்டு யாரும் சிலநாள் கூட உயிர் வாழ இயலாது. அனைவரும் இவ்வாறு இறப்பதைவிட, நம்மில் யாராவது ஒருவன் உயிர் பிழைத்தால், பழிக்குப் பழிவாங்கத் தோதாக இருக்குமே! ஆதலால் நான் ஓர் யோசனை சொல்கின்றேன். அதன்படி செய்தால், துரியோதனனை அடியோடு ஒழித்து விடலாம்” என்றான் சகுனி

“நூறு பேருக்குத் தரும் சோறும் தண்ணீரும் யாராவது ஒருவன் மட்டும் சாப்பிட வேண்டும். அப்போது ஒருவனாவது மேலும் சில நாள் சாவாமல் இருப்பான். யார் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்யுங்கள்” என்றான் சகுனி -