பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

த. கோவேந்தன்



“அண்ணா! நீதான் புத்திசாலி நீ உயிரோடிருந்தால்தான், துரியோதனனைப் பழிவாங்க முடியும்? ஆகையால் நீயே சோறும் நீரும் உண்ணுதல் வேண்டும்” என்று அனைவரும் ஒருமித்து உடன்பட்டனர்.

பட்டினியால் ஒவ்வொருவரர்கப் பட்டொழிந்தனர். சகுனி மட்டும் சோறும் நீரும் சிறிதளவாவது உண்டமையால், உயிர் தப்பினான்.

அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான்.

துரியோதனன் மேல் ஆத்திரம் பொங்கினாலும் சகுனி அதனை அடக்கிக் கொண்டான். “அன்பு மருமகனே! நீ எனக்கு எவ்வளவு உபகாரம் செய்தாய்? இந்தக் கயவர்கள் அனைவரும் சேர்ந்து பட்டத்துக்கு உரியவனாகிய என்னை ஒழிக்கத் திட்டம் போட்டிருந்தனர். நீ அதை உணர்ந்து சிறையிட்டு, இந்தக் கொடியவர்களை ஒழித்து எனக்குக் காந்தார நாடு முழுவதும் உரிமையாக்கி விட்டாய் இதற்கு உனக்கு எப்படிக் கைம்மாறு செய்வது?” என்று தேன் ஒழுக பேசினான். துரியோதனன் அவன் பேச்சை அப்படியே நம்பிவிட்டான்.

சகுனிக்கு அன்று முதல் தடயுடலான உபசாரம் நடந்தது. அரண்மனையே சகுனி சொன்னபடி இயங்கியது. துரியோதனனும் சகுனி போட்ட கோட்டைத் தாண்டுவதில்லை.

எவ்வளவு உபசாரம் கிடைத்தாலும் சகுனி தன் குரோதத்தை மறக்கவில்லை.

துரியோதனனுக்கு நல்லவன் போல நடித்து அவனைப் படு குழியில் தள்ளச் சமயம் எதிர்பார்த்திருந்தான்.

சகுனியின் யோசனைப்படியே அத்தினபுரத்தில் புதிய அரண்மனை உருவானது. அரண்மனை புகுவிழாவுக்குப் பாண்டவர் வரவழைக்கப்பட்டனர். விருந்து முடிந்த பின்பு சகுனி, தருமனைச் சூதாட அழைத்தான் வென்றான். துரெளபதையை மானபங்கப்