பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

37


படுத்தச் செய்தான். அதனால் பாண்டவரின் பகையைக் கிளறி விட்டான்.

சகுழி, மூட்டிய பகைத்தீ. பாரதப் போராக மூன்த்து. துரியோதனன் அடியோடு அழிந்தான். துரியோதனன் அழிவுகண்ட சகுனி பழிக்குப் பழி வாங்கிய நிம்மதியோடு உயிர் துறந்தான்.

சகுனி பற்றிய இந்த நாடோடிக்கதை நெடுங்காலமாக நம் நாட்டில் வழங்கி வருகின்றது.

இதே கதை சந்திரகுப்த மெளரியனைப் பற்றியதாக, வடநாட்டில் வழங்கி வருகின்றது. முத்ரா ராக்ஷஸம் என்ற நாடக நூலிலும் குறிப்பாக இடம் பெற்றுள்ளது.