பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

45


“அவர்கள் சென்ற பிறகு விருந்தினர் உண்ட இடத்தில் சிந்திக்கிடந்த பருக்கையில் புரண்டேன். என் உடலில் பாதி பொன்மயமானது. மறுபாதியையும் பொன்மயமாக்க வேண்டும் என்று. வேள்வி நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று புரண்டு பார்த்து வருகின்றேன். மறுபாதி பொன்மயமாகவே இல்லை இங்கே நடக்கும்” வேள்வியிலும் அதே நிலைதான்.

“ஆதலால் அந்த ஏழை அந்தணர் குடும்பம் நடத்திய வேள்விக்கு எந்த வேள்வியும் ஈடாகாது” என்று கூறிவிட்டு மறைந்தது

தன்னைவிடச் சிறந்த வேள்வியாளர் இலர் என்ற கர்வம் தருமனுக்குத் தலை தூக்கியது. அந்தக் கர்வத்தை இறைவன் கீரியில் வடிவில் வந்து அழித்து ஆட்கொண்டான். தன் வேள்வியைப் பழித்ததற்காகக் கீரியின் மேல் தருமன் சினம் கொள்ளவில்லை. தன்னை அகந்தைப் படுகுழியிலிருந்து ஈடேற்ற வந்த தெய்வம் என்று கீரி சென்ற திசையை நோக்கி வணங்கினான் தருமன்.