பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

47


இருவரில் யார் முதலில் தம் தொழிலை முடிப்பது என்பதில் விவாதம் ஏற்பட்டது. அரக்கன், “நான் தான் முதலில் முனிவரைத் தின்பேன்” என்றான், திருடன், “நான் தான் முதலில் ஆடுகளைத் திருடுவேன்” என்றான் விவாதம் வலுத்தது.

துரோணர் நிலைமையை உணர்ந்து கொண்டார். தன் தவ வலிமையால் அரக்கனைச் சாம்பலாக்கி விட்டார் திருடனைக் கல்லாகச் சபித்தார்.

குரு நிலத்தை அடுத்த காட்டில் இன்றும் அந்தக்கல் இருப்பதாகப் பேசிக் கொள்கின்றனர்.