பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

67



25. கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை


துரியோதனன் சபையில், துரெளபதி மானபங்கப் படுத்தப்பட்டாள். துச்சாதனன் அவள் புடவையை உரியத் தொடங்கினான். பாண்டவர்கள் ஐவரும் செய்வதறியாது கவிழ்ந்த தலையராய்க் கண்ணீர் உகுத்து நின்றனர்.

வீடுமன், துரோணன், கிருபன் முதலிய சான்றோர்களும் வாய் திறக்கவில்லை.

கற்புக்கரசி காந்தாரியோ “அஞ்சுடன் ஆறு ஆகட்டும்! அதற்கென்ன எழுந்து போடி?” என்பதுபோல் மூச்சு விடாமல் மெளனமானாள்.

இந்நிலையில் செயலிழந்த பாஞ்சாலி: “கோவிந்தா! கோவிந்தா!” என்று புடவை பற்றிய கையைத் தலைமேல் தூக்கிக் கண்ணனைச் சரணம் அடைந்தாள்.

துச்சாதனன் உரிய உரியத் துகில் வளர்ந்தது. ஆயிரம் யானை பலம் கொண்ட துச்சாதனன் சோர்ந்து ஓய்ந்து கீழே சாய்ந்தான். திரெளபதி மானம் இழக்காமல், மன்னர் சபையில் மாண்புடன் நின்றிருந்தாள்.

பாஞ்சாலி கூப்பிட்டவுடன் கண்ணன் புடவை சுரந்தானே! ஏன்? இப்படி ஒரு வினா எழுந்தது ஒரு நாட்டுப்புறக் கலைஞன் மனத்தில்.

தன் கற்பனையால் அத்ற்கு ஒரு காரணம் கண்டு பிடித்தான். இன்னொருவன் வேறொரு காரணம் கற்பித்தான். அந்த இரண்டையுமே காண்போம்.

ஒருமுறை கன்ன்ன் கத்தியால் பழம் அறுத்துக் கொண்டிருந்தான். அந்தக் கத்தி, கண்ணன் கையில் பலமாகப் பட்டுவிட்டது. இரத்தம் ஊற்றெடுக்கத் தொடங்கியது.