பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

த. கோவேந்தன்


பலர் அங்கே திரண்டிருந்தனர் கண்ணன் காயம் பட்டதற்கு என்ன செய்யலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை வாயினால, தம் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொணடிருந்தனர்.

பாஞ்சாலி, அவர்களைப் போல் அனுதாபப்படவில்லை இராஜபத்தினியாகிய அவள், புதுப்பட்டுப் புடவை கட்டியிருந்தாள் உடனே அப்புடவையில் ஒரு பகுதியைக் கிழித்துத் தண்ணீரில் நனைத்துக் கண்ணன் கையில் கட்டுப்போட்டாள். கைக்காயம் உடனே ஆறிவிட்டது உடனே எப்படி ஆறும்!

கண்ணன் அங்கிருந்தவர்களின் மனநிலையைச் சோதிக்கத் தானே கையில் காயம் ஏற்படுத்திக் கொண்டான் எல்லோரும் உதவ முன்வராத நிலையில் பாஞ்சாலி தானே பட்டுச்சேலை என்று பாராமல் கிழித்துக் கட்டுக் கட்டினாள்?

பாஞ்சாலி செய்த உதவிக்கு எப்படிக் கைம்மாறு செய்வது என்று நெடுநாளாகக் காத்திருந்தான் கண்ணன்.

பாஞ்சாலிக்குச் செய்யவேண்டிய நன்றிக்கடன், சாதாரணக் கடனுக்கு வட்டி வளர்வதுபோல் வளர்ந்து கொண்டே இருந்தது.

அந்த நன்றிக் கடன் தீர்க்கும் வாயப்பு, துரியோதனன் சபையில் வாய்த்தது. ஒரு புடவைத்துணுக்குக்காக மலைமலையாகப் புடவைகளைக் குவித்த பின்பே, கணணன் தன் கடன் சுமை தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தான்.

இது ஒரு கலைஞனது கற்பனை.

இனி மற்றொருவன் கற்பனையையும் காண்போம்.

ஒரு முறை கண்ணன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது, அவன் கட்டியிருந்த ஆடையை ஒரு மீன் இழுத்துக் கொண்டு மறைந்துவிட்டது.

ஆடையில்லாமல் கண்ணன் கரை ஏறுவது எப்படி? கரை ஏறினாலும் வீடுவரை செல்வது எப்படி? தண்ணீருக்குள் மூழ்கியவாறே தத்தளித்துக் கொண்டிருந்தான். குளிர் உடலை வாட்டுகின்றது பசியோ காதை அடைக்கின்றது