பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

69



அவ்வழியே பலர் சென்று கொண்டுதான் இருந்தனர் யாருக்கும் கணணன் நிலை கண்டு உதவத் தோன்றவிலலை அவர்கள் வழியே போயக் கொண்டிருந்தனர்

அப்போது, பாஞ்சாலி அவ்வழியே வரநேர்ந்தது கண்ணன் நீரில் தததளிப்பதைப் பார்த்தாள அவன் கரை ஏறாமைக்குரிய காரணத்தையும் உயத்து உணாந்து கொண்டாள். உடனே தான் அணிந்திருநத விலையுயர்ந்த படடுச் சேலையில் ஒரு பகுதியைக் கிழித்துக் கண்ணனிடம வீசினாள கண்ணன் அதை உடுத்துக் கொண்டு கரை ஏறினான்.

காலத்தினால் செயத பாஞ்சாலியின் உதவி ஞாலத்தின் மாணப் பெரிதனறோ? இந்த நன்றிக் கடன், வட்டிபோல் வளர்ந்து கொண்டே இருந்தது. இக்கடனைத் தீர்ககும் வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தான் அந்த வாய்ப்பைத் துரியோதனன உணடாக்கித் தந்தான், கணணன் தன் கடனைத் தீர்க்க அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொணடான்