பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

77



தான் எய்தது விலங்கை அல்ல, கண்ணபிரானையே என உணர்ந்த வேடன் நடுங்கினான்

“ஐயோ! எத்தகைய பாவம் செய்துவிட்டேன் உலகம் காக்க அவதாரம் செய்த அச்சுதனை அல்லவா எய்துவிட்டேன் இனி நான் உயிரோடிருத்தல் தகாது” என்று தன் அம்பாலேயே தன் வயிற்றைக் கீறிக் கொள்ள முனைந்தான்

இறைவன், நில்லு வேடப்ப! நில்லு வேடப்ப! என்று அபயம் கொடுத்து, அருகில் அழைத்து, நீ தெரிந்து இத்தவறு செய்யவில்லை அதுமட்டுமல்ல எனக்கு நன்மையே செய்துள்ளாய் என் அவதார நோக்கம் நிறைவேறிவிட்டது அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்

அடுத்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளுவதே பரமபதம் மீளுவதே செய்ய வேண்டுவது என்பதனை நீ உன் செயலால் உணர்த்தி விட்டாய்! நீ பாபம் என்று எண்ணுவது, எனக்கு லாபமாக முடிந்தது என்று ஆறுதல் கூறினான்

பின்னர், அந்தரத்திலிருந்து வந்த தெய்வ விமானத்தில் அவ்வேடனை தூலஉடலுடனே ஏற்றிப் பரமபதத்துக்கு அனுப்பினான்