பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

79


எப்போதும் போல், கண்ணன் வெண்ணெய் திருடுவதற்காக ஒரு வீட்டுப் படலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். உறியில் மணி கட்டியிருப்பதை பார்த்தான்

வெண்ணெய் எடுத்தால், மணியொலித்துவிடும். உடனே மணி ஒலித்துவிடும். உடனே ஆய்ச்சியர் வந்து பிடித்து கொள்வர். மணி ஒலிக்காமலிருக்க என்ன செய்யலாம் என்று உபாயம் தேடினான்.

மணியைப் பார்த்து. “மணியே! மணியே! நான் வெண்ணெய் எடுக்கும் வரை நீ ஒலிக்காமல் இரு! உனக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று மணியிடம் வேண்டினான்.

மணியும் சம்மதித்தது

கண்ணன் உறியில் கைவிட்டு வெண்ணெயைக் கையில் எடுத்துக் கொண்டான். அதுவரை சொன்னவாக்குப்படி மணி ஒலிக்காமல் இருந்தது.

“இனியாரும் நம்மைப் பார்க்க இயலாது வெண்ணெயை ஆர அமர உண்ணலாம்” என்று மகிழ்ந்த கண்ணன், வெண்ணெயை வாயில் வைத்தான்.

வைத்தது தான் தாமதம். உடனே மணி வேகமாக ஒலிக்கத் தொடங்கியது.

கண்ணன் மணியைப் பார்த்து, “ஏ மணியே சொன்ன வாக்குத் தவறலாமா? ஒலிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது உரக்க ஒலிக்கின்றாயே ஆய்ச்சியர் வந்துவிடுவார்களே இப்படி என்னைக் காட்டிக் கொடுப்பது ஞாயமா?” என்று கேட்டான்.

“கண்ணா! நீ வெண்ணெய் எடுக்கும்போது தானே ஒலிக்க வேண்டாம் என்றாய்! நான் எடுக்கும் போது ஒலிக்கவில்லையே நீ உண்ணும்போது தானே ஒலித்தேன். இது எப்படி வாக்குத் தவறியதாகும்?”

“அது மட்டுமல்ல. ஆலயங்களில் இறைவன் நிவேதனம்(உணவு) கொள்ளும்போது, நான் ஒலிப்பது வழக்கம்