பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

த. கோவேந்தன்


காட்சி-1
இடம் யமுனைக் கரையில் மரம் அடர்ந்த பகுதி
காலம் மாலை
பாத்திரங்கள் சீமாலிகன், சில தோழர்கள்

ஒருவன்: சீமாலிக வேட்டைக்காகக் காட்டில் வெகுதூரம் வந்துவிட்டோம். களைப்பாக உள்ளது பசி வயிற்றைக் கிள்ளுகின்றது அதோ அம் மாமரத்தில் கனிகள் பழுத்துத் தொங்குகின்றன அவற்றைப் பறித்துத் தின்னலாம் வா!

மற்றொருவன்: ஆமாம்! ஆமாம்! எனக்கும் பசிதான் வாருங்கள் போகலாம்

எல்லோரும் சரி! சரி! புறப்படுவோம் (சற்றுத்துரம் செல்கின்றனர்)

ஒருவன்: அதோ பார் அந்த மாம்பழம் எவ்வளவு உயரத்தில் தொங்குகின்றது? அது தன் பொன்வண்ணம் காட்டி நம்மை நோக்கிப் புன்னகை புரிகின்றது சீமாலிக எனக்கு அந்தப் பழம் பறித்துத் தர மாட்டாயா?

சீமாலிகன்: இதோ! உன்கையில் அதை விழச்செய்கின்றேன். (அம்பு எய்கின்றான் அது கனியில் படாமல் ஒரு காயை வீழ்த்துகின்றது)

ஒருவன்: என்ன சீமாலிக! கனியைக் கேட்டால், காயை வீழ்த்துகின்றாயே! களைப்பினால் கண் பஞ்சடைந்து விட்டதா?

இன்னொருவன்: குறி தவறாமல் எய்துவிட, இவன் என்ன அந்தக் கண்ணபிரானோ? யானைக்கும் அடி சறுக்கும்!

சீமாலிகன்: (சினத்துடன்) நிறுத்து கண்ணனைப் புகழ்ந்து என்னை ஏளனம் செய்யாதே! யானைக்கு அடி