பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

87



வேறொருவர்: யாருக்கும் அஞ்சாத நம் வாலிபர்களை அவன் அச்சுறுத்தி அடக்கி ஆள்கின்றான். அவன் ஆணைப்படியே எல்லோரும் நடக்க வேணடும் என்று வற்புறுத்துகின்றான். அவனுக்கு அடங்கி நடக்காதவரை அடித்துத் துன்புறுத்துகின்றான்

மற்றொருவர்: அவனை யாராலும் அடக்க முடியவில்லை கண்ணனிடம் நண்பனைப்போல் நடித்து, அனைத்து வித்தைகளையும் நன்கு கற்றுக் கொண்டுவிட்டான் அதனால் கருவம் தலைக்கு ஏறிவிட்டது. இவனை இப்படியே விட்டுவிட்டால், ஆயர்களாகிய நமக்கு அமைதியே இல்லாமல் போகும்.

இன்னொருவர்: தலைவர் அவர்களே! இதற்கு இப்போதே ஒரு முடிவு கட்டியாக வேண்டும்

தலைவர்: உங்கள் குறைகளையெல்லாம் நானும் நன்கு அறிவேன் நாமாக அவனை ஒன்றும் செய்ய இயலாது. நாமே ஏதாவது செய்ய முயன்றாலும், கண்ணனது வெறுப்புக்கு ஆளாக நேரும். ஆகையால், நாம் அனைவரும் அரசர் நந்தகோபரிடம் சென்று முறையிடுவோம் அவர் கண்ணனிடம் சொல்லிச் சீமாலிகனை அடக்க ஏற்பாடு செய்வார் இப்போதே புறப்படுங்கள் (எல்லோரும் நந்தகோபன் அரண்மனை நோக்கிப் புறப்படுகின்றனர்)


காட்சி-4
இடம்          நந்தகோபன் ஒலக்கம்   
காலம்         மாலை 
பாத்திரங்கள்  நந்தகோபன், அமைச்சர், ஆயர், கண்ணன், 
               நாரதர்