பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

த. கோவேந்தன்



(நந்தன் அரியணையில் உள்ளான். காவலர் வருகின்றனர்)


காவலர்: வாழ்க மன்னர்! வளர்க அவர் கொற்றம்!

நந்தன்: காவல்! என்ன செய்தி!

காவலன்: அரசே! ஆயர் பெருமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வந்துள்ளனர்.

நந்தன்: உள்ளே வரச்சொல்! (காவலன் அவர்களை அழைத்துவருகின்றான்)

ஆயர்பெருமக்கள்: அரசே வணக்கம்.

நந்தன்: வாருங்கள் பெரியோரே! நம் ஆட்சியில் உமக்கு ஏற்பட்ட குறை யாது?

ஆ.பெருமக்கள்: : அரசே! நம் இளவரசர் கண்ணபிரானின் உயிர்த்தோழனாம், சீமாலிகன், இளவரசர் தரும் சலுகைகளால் கருவம் கொண்டு, ஆயர்பாடியில் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சமன்று.

இன்னொருவர்: ஆம் அரசே! நேற்று என் வீட்டுக்கதவைத் திறந்து வாள் காட்டி அச்சுறுத்தி, வீட்டிலிருந்த நகை, பணம் முதலியவற்றையெல்லாம் அள்ளிக் கொண்டு போய்விட்டான்.

மற்றொருவர்: ஆமாம் அரசே! என் மகள் யமுனைக்கு நீர் கொணரச் செல்லுகையில் வழி மறித்து நகைகளை அபகரித்துக் கொண்டான்.

இன்னொருவர்: அரசே! தெருவில் செல்லும்போது, என்மகனை வலுச்சண்டைக்கு இழுத்து, மண்டையைப் பிளந்துவிட்டான்.

அமைச்சர்: அரசே இதைப்போலப் பலமுறையீடுகள் என்னிடமும் வந்துள்ளன. இளவரசரின்