பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

த. கோவேந்தன்



நாரதர்: இங்கு நடந்ததனைத்தும் தெரிந்து கொண்டேன். அமைச்சர் சொன்னதுபோல் சீமாலிகனை அடக்க கண்ண பெருமானால் தான் முடியும்.

கண்ணன்: நாரதரே! மன்னிக்க வேண்டும். சீமாலிகன் என் உயிர் நண்பன். நண்பனைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ என்னால் இயலாது. தோழனுக்குத் துரோகம் செய்யமாட்டேன். அவனை அடக்க வேறு வழி தேடிக் கொள்ளட்டும்!

நாரதர்: கண்ணா! கடமையைப் புறக்கணிப்பது பெருமையன்று. அடாது செய்பவன் யாராய் இருந்தால் என்ன? உயிர்நண்பன் ஆனாலும் அடக்கித்தான் தீரவேண்டும். கண்டித்துத் தான் தீர வேண்டும். இது அரசகுமாரனாகிய உன் கடமை.

கண்ணன்:: நாரதரே! எது நேரினும் சரி என்னால் இக்காரியம் மட்டும் முடியாது. என்னை விட்டு விடுங்கள்.

நாரதர்" கண்ணா! இப்போது அப்படித்தான் கூறுவாய் பார்! நீயே சீமாலிகனைக் கொல்லப் போகின்றாய்! உன் கையாலேயே அவன் அழியப்போகின்றான். நாரதன் சொன்னது நடந்தே தீரும்?

கண்ணன்: நாரதரே! இந்த இடத்தில் உம் வாக்குப் பலிக்காது. ஏமாந்து போவீர்!

நாரதர்: ஏமாந்து போவது யார்? நாடோடி நாரதனா? ஆயர்பாடி அச்சுதனா? பொறுத்துப் பார்க்கலாம். நாராயண' நாராயண' (நாரதர் போகின்றார்)

(திரை)