உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5 காயமடைந்தவர் பலர் ; பிடிபட்டோர் பலர்; வெள்ளை- யர் கைகளில் அகப்பட்டோர் அடிமைகளாக நடத்தப் பட்டனர்; வெள்ளையர் வீடுகளில் இருந்து குற்றேவல் செய்து வந்தனர். அம்மட்டோ! சில வியாபாரிகள், டச்சு - ஆங்கில வியாபாரிகள் மூலமாக ஆப்பிரிக்காவி- லிருந்து நீக்ரோவரை விலைக்கு வாங்கி, அமெரிக்காவில் பணக்காரர்க்கு விற்று வந்தார்கள்; நகரப் பொது இடங்களில் அவர்களை நிறுத்தி விலை கூறி விற்றார்கள். இத்தகைய கொடுமையைச் சிலர் வெறுத்தனர். எனி - னும், அமெரிக்கர் பலர் அதற்கு ஆதரவு அளித்தனர். அதனால், அமெரிக்காவில் அடிமை வியாபாரம் குடி- யரசு ஏற்பட்டும் நூறாண்டுகள் வரையில் நடைபெற்று வந்தது. நூறாண்டுகட்குப் பின்னர் அக்கொடிய அடிமை வர்த்தகம் ஒழிந்ததா? ஆம். அஃது அடியோடு ஒழிந்- தது. ஆ ! அதனை ஒழித்த வீரன் யாவன்? இவ்வதி- காரத் தொடக்கத்தில் அடிமை வர்த்தகத்தைக் கண்டு வருந்தி,"என் ஆயுட் காலத்துள் இவ்வடிமைத் தளை - யினை அகற்றுவேன்!" எனக் கூறின வீர இளைஞனே அக்கொடிய அடிமை வர்த்தகத்தை ஒழித்தான்; அடிமைகட்கு முழுச் சுதந்திரத்தையும் அளித்து அவர்களைக் காத்தான். ஆ! அவன் பெயர் யாது? எப்ரஹாம் லிங்கன் என்பதே அவனது தூய்மையான பெயர். நீங்கள், பின் கூறப்பட்டுள்ள அவனது வர- லாற்றிலிருந்து அவன் எவ்வாறு அடிமைத் தளையை அடுயோடு அகற்றி, உலகெலாம் தன் பெயரையும் புகழையும் நிலை நிறுத்தினான் என்பதை அறியலாம்.