கோலாமரப் பாட்டு
(1)
சித்திரைமாசம், கத்தரி கோடைக்காத்து,
வைகாசிமாசம், கத்தரி கோடைக்காத்து,
முன்ஏழு பின்னேழு பேர்கட்டும் காவலாளி:
✽✽✽
நாலொரு மக்களும் கிழக்கு முதத்தில்போய்க்
கொள்ள வேணும்;
கட்டுமரப் பட்டறையைப் போட்டு
மரத்துக்காரன் வீட்டண்டை வரவேணும் காவலாளி;
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூ பாய்குடுத்தால்
வெள்ளைப்பொட்டிக் கள்ளுக்கு மாத்துக்கள்ளு
வேணும்;
அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில்வந்து
பூசை நடத்தினோம் காவலாளி,
பூசை நடத்திப்போட்டு அவங்கவங்க வீட்டுக்குப்
போய்த் தலைமுழுகப் போனாங்க காவலாளி;
நமக்கேத்த வெள்ளந்தான் நல்லவெள்ளம் கண்ணாளா!
✽✽✽
முன்னச்சோ கொள்ளை கொண்டபருவை;
நம்மச்சோ நாலாம் பருவை;
நாரால்அளந்து, நல்லருண்டி ஆண்டு
நூலால்அளந்து நூத்திலப் பேராண்டு,
பேரால்பெருத்துப் பெரிய மயிலாண்டு;
ஆண்டவரே வாரும்; எஞ்சாமி வாரும்;
மலைவெள்ளம் வந்தது; மதியைக் குலைக்குது;
தலைவெள்ளம் வந்தது; தலையை உடைக்குது;
தரையிலே விழுந்து தானா நகர்ந்து
கிடையிலே விழுந்து இடப்புறம் ஓடி,