பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வண்ணான் பாட்டு

ஆணைக் கல்லு ஓரத்திலே

ஆள் மட்டுந் தண்ணியிலே


நீலக் கல்லுப் பாறை மேலே

நின்னடிக்கும் சின்ன வண்ணான்


நான்போக நேரம் ஆச்சு:

என்துகிலைத் தாரு மோடா,


போனாலும் போவே புள்ளே,

போவதற்கு முன்னே கொஞ்சம்


வெள்ளாவி அடுப்புக்கு

விறகெடுத்துப் போடுபுள்ளே.


___________