இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏற்றப் பாட்டு
43
தொண்ணுாறியால் மூணு, தொண்ணுாறியால் நாலு.
துஷ்டன்துச் சாதனன் துகிலுரிஞ்சான் பாவி!
தொண்ணுாறியா லஞ்சு, தொண்ணுாறியா லாறு,
தொண்ணுாறியா லேழு, தொண்ணூறியா லெட்டு.
தொய்யப் படராது, ஐயர்ஏறும் காளை;
தூள்பரியாச் சங்கு, துதிபண்ணினாரே மாயன்;
தொடுவாயடா என்னை; அறிவாயடா சேதி,
தொண்ணூறும் பத்தும் சென்னுதையா நூறு