ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு
பிள்ளையாரே வாரும், பெருமாளே வாரும்;
வாணி சரஸ்வதி வந்தருள வேணும்.
மாயன்பெரு மாளே, என், மனசில்நிற்க வேணும்;
முப்பத்துமுக் கோடி (தேவர்களே சரணம்);
நாற்பத்தெண் ணாயிரம் ரிஷிகளே சரணம்;
ஸ்ரீராமர் கதைபாட வந்தருள வேணும்.
எட்டுடனே வாரீர். ராக்ஷசாள் பயத்தால்
தேவர்கள் பயந்து ஜெபதபம் விட்டுக்
கைலைமலை வாழும் கர்த்தருடன் சொன்னார்;
ராக்ஷசா ளுடைய துன்பமது வெல்லாம்
பாங்குடனே சொல்லச் சபையதுதான் கூடி
யோசனைகள் செய்து, வானரங்க ளாலும்
மானிடவ ராலும் தான்மடிய வேணும்.
மாயவர் உரைக்கத் தேவரெல்லாம் கூடி
வானரங்கள் ஆனார். (வனத்துக்குப் போனார்).
சதுமுகனார் தாமே சாம்பவனு மானர்;
தேவேந்திரன் தானும் வாலியவ னானான்;
சூரியன் தானும் சுக்ரீவன் ஆனான்;
எமதர்ம ராஜன் அங்கதனு மானான்;
ஆதிசிவன் தானும் அனுமாராய் வந்தார்;
அக்கினி தேவனும் நீலனாகி வந்தான்;
இவ்வித மாக இந்தஉல கத்தில்
சங்குசக்க ரங்கள் பரதசத்து ருக்னராய்
ஆதிசேஷன் தானும் லக்ஷ்மணனு மானார்;
ஆதிவிஷ்ணு தாமும் ராமராய்ப் பொறந்தார்;
தசரதர் வயிற்றில் நால்வரும் வருக;
இவ்விதம் வருவோம், தேவர், இடையூறு நீங்க;
அஞ்சவேண்டாம் என்று அபயஹஸ்தம் தந்தார்;
தசரதரும் அப்போ புத்ரகா மேஷ்டி
யாகமது செய்ய, அதில், ஓமபிண்ட மாக