உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தொழில்கள்

ஈச்சங் காடாம், இருண்ட சோலை
இருக்கி றான்னு வரச்சொல் லுங்க;
இருந்தால் இருக்கும் இடம்;
இருள்போனால் தங்கும் இடம்,
போனால் இருக்கும் இடம்,
பொழுதுப்போனால் தங்கும் இடம்;
தங்குவேனா இங்கே? மெல்லத்
தரிப்பேனோ தாயார்மனம்?
தாய்அறிவாள் புள்ளைகுணம்;
பசியறிந்து பால்தருவாள்;
பாலன் பிறந்தாண்டி,
பதினெட்டாந் தேதிக்குள்ளே,
தம்பி பிறந்தாண்டி தரணிஇந்த நாளையிலே;
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
தென்னந் தெருவிலே தேரோடும் வீதியிலே
மன்னன் மகளாலே மகராசன் வீடுதேடி,
வீடுமல்ல, சோடுமல்ல; எதிராளி ஒருவன்அல்ல;
பாடுமல்ல; பிறப்புமல்ல; பகையாளி ஒருவன்அல்ல;
ஒருவர் மயிர்புடிக்க ஒன்பதுபேர் வேதம்சொல்லப்
பலபேர் மயிர்புடிக்கப் பன்னெண்டுபேர் வேதம்சொல்ல
வேதப் பொருளையம்மா, விளையாடும் பார்வதியே,
பச்சைப் பொருளையம்மா, உன், பாவனையை ஆரறிவார்?
ஆரை நினைப்பேனம்மா, அளவற்ற சிந்தையிலே?
எவரை நினைப்பேனம்மா, எண்ணமிட்ட சிந்தையிலே?
எண்ணாத எண்ணமெண்ணி ஏழைமனம் குன்னுறேனே;
கல்லோடி உன்மனசு? இரங்கலையோ எள்ளளவும்?
ஆராரு காவலோ, ஆதிசத்தி உன்காவல்?
எவரெவர் காவலேர், ஏழுசக்தி உன்காவல?
சக்தி உமையவளே, சமயம் பதினாயிரம்;
சரணம், சரணம்அம்மா, சாச்சாங்கம் நான்சரணம்;
நான்தானோ பொண்பொறந்தேன்? நாட்டிலேயும்
          பொண்இலையோ?