உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்கள்

71

ஒருத்திதானோ பொண்பொறந்தேன்? ஊரிலேயும்
        பொண்இல்லையோ?
பொண்ணாய்ப் பொறந்ததொல்லை போதுமடி என்றனக்கு;
எந்தஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து இங்குவந்தாய்?
ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ?
கட்டி லுண்டு, காவலுண்டு—உனக்குக்—கால்பிடிக்கத்
        தாதிஉண்டு;
உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு;
என்னவென்று சொல்லுவனோ? எழுதுவனோ ஓலையிலே?
ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி,
பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி;
சங்கு முழங்கிவரச் சங்கரனார் கோவிலிலே,
கோவிலும் தூரம்அம்மா, குழந்தைமனம் காதமம்மா,
மாளிகையும் தூரமம்மா, மைந்தன்முகம், காதமம்மா.
காகம் பறவாது; கருங்குருவி நாடாது;
சிட்டுங் பறவாது; செங்குறுமான் நாடாது;
நாடுதங்கி வாமகனே; நல்லசேதி சொல்லட்டுமா?
ஊருதங்கி வாமகனே; உற்றசேதி சொல்லட்டுமா?
ஊருக் கதிகாரி, உள்ளூரு வெள்ளாளச்சி;
வெள்ளாளப் பொண்டுகளா, விளையாடும் பார்வதியே!