பக்கம்:ஏலக்காய்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

அதிசயப் பொருள் என்ன, தெரியுமா?— அதுதான், நறு மணமும் இன்சுவையும் பூண்ட இந்திய ஏலக்காய்!– இச்செய்தி, ஏலக்காயின் கதைக்கு வரலாற்று அந்தஸ்தை வழங்கி இன்றைக்கும் பெருமை அடைந்து வருவதும் உண்மைதான்!

இன்னுமொரு வரலாற்று நிகழ்ச்சியும் உண்டு.

கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டு, கடைசியில் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கத் தூண்டுதல் காரணமாக அமைந்ததும். இந்திய நாட்டின் ஏற்றமிகு ஏலக்காய்தானே!

ஜனவரி முதல் அடிநிலத்துத் தண்டினின்றும் உருவாகிப் புறப்பட்டு மண்ணிற்கு வெளியே தலைநீட்டத் தொடங்கும் இந்தக் கொம்புகளின் கணு இடைப் பகுதிகளிலே, ஏப்ரல் தொடங்கிப் பூக்கள் பூக்கத் தொடங்கும்; பூச்சரங்கள் உருவாகத் தலைப்படும்; பூத்த மூன்று மாதங்களுக்கெல்லாம் காய்கள் உருவாகிவிடுகின்றன. சிறுசிறு காம்புகளோடு தோன்றுகின்ற ஏலக்காய் வித்துறைகள் தாய் நிலத்தின் மண்ணின் மேற்பரப்பில் தவழ்ந்து விளை யாடவும் ஆரம்பித்துவிடும்.

ஆரோக்கியமான ஏலச்செடி சராசரியாக 2 மீட்டர் முதல் 4 மீட்டர் வரையிலான உயரத்திலே வளர்கிறது: வளர்ச்சி அடைகிறது. சம அளவில் ஒடுங்கி நீண்ட இலைகள் ஈட்டி போன்ற அமைப்புடன் இருவரிசைகளிலும் சின்னஞ்சிறிய இலைக்காம்புகளுடன் தோன்றும்.

பருவமழை ஜூன்–ஜூலையில் தொடங்கியவுடன், நாற்றுக்கள் மறுநடவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் பொதுவாக ஏலச்செடி பூத்துக் காய்க்கத் தொடங்கிய போதிலும், வர்த்தக ரீதியிலே லாபகரமான விளைச்சல் நான்காவது ஆண்டிலேதான் கிடைக்கத் தொடங்கும். ஏலக்காய் விளைச்சலின் காய் எடுப்புக்கு, அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/16&oldid=505913" இருந்து மீள்விக்கப்பட்டது