பக்கம்:ஏலக்காய்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அறுவடைக்கு உகந்தகாலம் ஆகஸ்ட்–செப்டம்பரிலேயே அமையும்.

பொதுப்படைத் தோற்றம்

உலகம் முழுமைக்கும் பொதுவாகவும் பொதுப்படையாகவும் விளங்கும் தாவிரனத்தில் எத்தனை எத்தனையோ வகைகளும் உட்பிரிவுகளும் இயற்கையிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான்—அவற்றிலே, பல்லாண்டுக் காலத்திற்கு உயிர் வாழக்கூடிய தனி இயல்பு கொண்டதாக விளங்கும் ஏலக்காய்ச் செடிக்கு வாய்த்திட்ட இச்சிறப்பை இயற்கையின் அருட்கொடை என்றேதான் மதிப்பிடல் வேண்டும்!

ஏலச்செடியின் வேர்கள் புறப்படுவதற்கான அடிநிலத்தண்டு, சாகுபடி நிலப்பரப்பின் அடியிலேயே நிலைத்திருக்கும். இந்தத் தண்டிலிருந்து தோன்றும் இளந்தளிர்க் கொம்புகள் காற்றோட்டத்திலே அசைந்தாடியவாறும்; சாய்ந்தாடியபடியும் வெளிப்புறத்திலேயே அமைந்திருக்கும், இப்பொது விதி மீண்டும் நினைவுக்குரிய குறிப்பாகவே அமையும்!

ஏலச்செடி நுட்பமான தன்மை உடைய அபூர்வமான தாவரம்!

ஊட்டச்சத்துக்கள் மிகுந்த மண் வளமும், சகஜமான ஈரப்பத நிலையும், சீரான நிழல் அமைப்பும், மிதமான தட்பவெப்ப நிலவரமும் ஏலச்செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பெருந்துணை செய்யும். ஆகவே, ஏலச்சாகுபடி முறையில், முறையான செடிப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விஞ்ஞானப்பூர்வமான நடைமுறைச் செயற்பணிகளையும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஏல விவசாயிகள் மேற்கொண்டால், விளைச்சல் அமோகமாகப் பெருகும் வாய்ப்பும், ஆதாயம் கணிசமாகக் கூடுதலடையும் வசதியும் ஏற்படவே செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/17&oldid=505914" இலிருந்து மீள்விக்கப்பட்டது