பக்கம்:ஏலக்காய்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏலச்செடியில் ரகம் மூன்று 2


தென் இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில், என்றென்றும் பசுமை கொழிக்கும் காடுகள் தழைத்துச் செழித்துப் படர்ந்து பரவிக்கிடக்கின்ற மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதிகளில் பரவலாகவும் தீவிரமாகவும் பயிர்செய்யப்பட்டு வருகின்ற சிறிய ரக ஏலக்காய்ச் செடிகளிலே, மூன்று பிரிவுகள் உண்டு.

அவை:
'மைசூர் வகை'
'மேலபார் ரகம்'
'வழுக்கா இனம்'.

ஏலச்செடிகளின் வடிவ அமைப்பின் இயல்புகளை உணர்ந்தும் அவற்றின் குணநலன்களைக் கண்டும் இந்த மூன்று வகைச் செடிகளையும் இனம் கண்டு கொள்ளவும் முடியும்!

ஏல விவசாயத்தில் கேரளம்தான் முதன்மையான நிலையைப்பெற்று விளங்குகிறது.

மைசூர் ரகம்

ஏலக்காய்ச் செடியின் மைசூர் ரகம் உறுதி மிகுந்தது: 2-3 மீட்டர் உயரம் வளரும். நீண்ட காம்புகளுடன் கூடிய இலைகள் இருண்ட, அழுத்தமான பச்சை நிறத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/18&oldid=505916" இலிருந்து மீள்விக்கப்பட்டது