பக்கம்:ஏலக்காய்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அகன்றும் மென்மையாகவும் அமைந்திருக்கும்; பூங் கொத்துக்கள் நிமிர்ந்திருக்கும்; காய்கள்–வித்துறைகள் நீண்ட வட்டவடிவமாக வளரும்; முதிரும். ஒவ்வொரு கொத்திலும் வித்துறைகள் நிறைந்திருப்பது இந்த ரகச் செடியின் சிறப்பு அம்சம். கடல் மட்டத்திற்கு மேல் 900 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரையிலும் உயர்ந்துள்ள நிலப்பரப்பில் பயிர் செய்து உயர்விளைச்சல் பெறுவதற்கு உகந்தது மைசூர் ரக ஏலச்செடி!

மலபார் இனம்

நடுத்தரமான உருவ அமைப்புடன் சுமார் 2 மீட்டர் அளவிலேயே வளர்ச்சியடையும் தன்மை கொண்ட மலபார் இன ஏலக்காய்ச் செடிகளின் இலைகள் நீண்டும் குறுகியும் காணப்படும். இலைக்காம்புகள் கூட சிறுத்துத்தான் இருக்கும்; மைசூர் ரகத்தினின்றும் மாறுபட்ட அளவிலே, மலபார் வகைச் செடியின் பூச்சரங்கள் தலை சாய்ந்து குப்புறப்படுத்த நிலையில் தோன்றும்; மைசூர் வகைமாதிரி இந்த ரகத்தில் கணு இடைப்பகுதிகள் நீண்டிருக்காமல், குறுகலான இடைவெளிகளோடுதான் வளர்ச்சி அடையும், விதை உறைகள், அதாவது காய்கள் உருண்டையான வடிவத்திலோ, அல்லது நீண்டு உருண்டையான அமைப்பிலோ உருவாகும். 600 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரை தாழ்வான உயரமுள்ள சாகுபடிப் பரப்புகளில் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாகக் கருதப்படுகின்ற மலபார் ஏலச்செடிகள் 'த்ரிப்ஸ்' எனப்படும் சாறு உறிஞ்சிப் பூச்சிகளின் பயங்கரமான தாக்குதலையும், வறட்சி நிலையையும் சகித்துக் கொள்ளும் தன்மை கொண்டவை எனவும் கருதப்படும்.

வழுக்கை வகை மைசூர் மற்றும் மலபார் ரகங்களின் ஒட்டுக்கலப்பு இனச்செடிதான் வழுக்கை ரகம் சார்ந்த ஏலச்செடி!—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/19&oldid=505917" இருந்து மீள்விக்கப்பட்டது