உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

'ஆல்ஃப்செட்' என்பதாகவும் ஏலச்செடித் தொகுதி உண்டு; ஏலக்காயில் பூக்கள் பூத்ததும், பூச்சரங்கள் பளிச்சிடும்.

'கன்னி ஏலம்’, ‘மார்சராபாத்" போன்ற வகைகள் சுற்றுப்புறங்களுக்குத் தக்கபடி வளரக் கூடியவை. இவை 'மலபார்' வகையில் சுட்டிச் சொல்லப்படத் தக்கவை; விவசாயச் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு வளர்வதில் இவற்றுக்குத் தேர்ச்சி கூடுதல்.

பொதுவாகவே, ஏலக்காய்ச் செடியின் பூக்காம்புகள் டிசம்பர் தொடங்கியதுமே வளர்ச்சியடையத் தொடங்கி விடும்; பூக்களின் மலர்ச்சியைச் சொல்லிக் காட்டும் மாதம் ஏப்ரல்; பூமணம் ஆகஸ்ட் வரை தொடரும்; மண்ணின் சரப்பதம் சாதகமாக அமைந்தால், இந்நிலை மேலும் நீடிக்கக்கூடும். பூச்சரங்களின் தலைக்காம்புகளில் பூக்கள் தோன்றும்; இந்தப் பூக்கள் ஒரேயொரு தளத்தில் மாத்திரம் பூக்கும்; அவற்றைச் சமமான இரண்டு பாதி ஆகவும் பிரித்து விடலாம்; உதடு மாதிரி, இரு கூறாகப் பிளந்தும் பிரிந்தும் தோன்றும் மலரின் கீழ்ப்புறம்தான் அதன் முனைப்பான பகுதி. இதுவே, தேனீப் பண்ணையால் உண்டாக்கப்படும் மகரந்தச் சேர்க்கைப் பணிக்கு ஜீவாதாரம் ஆகின்றது. இதன் சூல் அணுக்கள், கருத்தறிக்கின்ற வித்துக்களின் பரிணாம வளர்ச்சியைத் தூண்டும்.

ஏலக்காயின் பழங்கள், அதாவது, காய்கள் சிறிதானவை; அவை மூன்று கண்ணறைகளோடு கூடிய வித்துறைகளாகவும் உருப்பெறும். விதை உறை. ஒவ்வொன்றிலும் 15-20 விதைமணிகள் அடங்கியிருக்கலாம்; அவை 3, 4 மாதங்களில் முற்றி முதிர்ந்து விடும்; முதிர்ந்த பின்னர், விதை உறைகளின் உள்ளே அமைந்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/21&oldid=505920" இலிருந்து மீள்விக்கப்பட்டது