உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

விதைகள் இருண்ட பழுப்பு நிறத்தை மாற்றிக் கொண்டு, பளிச்சென்று கறுப்பு நிறத்தை அடையும். ஏலக்காய்ப் பயிர்த்தொழிலின் நல்வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் அனுசரணையான இயற்கைச் சூழலிலே ஆரோக்கியமாகத் தோன்றுகின்ற முதிர்ந்த செடி ஆண்டுக்குச் சுமார் 2000 காய்கள் (பழங்கள்) என்னும் வீத அளவிலே விளைச்சல் தரும். காய் எடுப்பின்போது (அறுவடை) அவை கிட்டத் தட்ட 900 கிராம் எடை தங்கும். உலர வைத்துப் பக்குவம் செய்து பதப்படுத்திய பிறகு அவற்றை நிறுவை செய்தால், 200 முதல் 400 கிராம் எடைதான் தேறும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/22&oldid=505921" இலிருந்து மீள்விக்கப்பட்டது