உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பிறகு, எகிப்து நாட்டினர் இந்தியாவுடன் தொடர்பு கொள்ளலாயினர்.

எகிப்தைப் படைதொடுத்து வெற்றிபெற்ற ரோம், வாசனைப் பொருள் வர்த்தகத்தில் இந்தியாவோடு. தொடர்பு வைத்துக் கொள்ளவும் தவறவில்லைதான் . காலம் ஒரு புள்ளிமான் ஆயிற்றே!

இந்திய நறுமணப் பொருள்களுக்கு மத்தியில் ஏலக்காய் மனம் உலகத்தை வெகுவாகவே கவர்ந்தது.

வாசனைத் திரவியங்களுக்குள் ஒரு வாசனைப் பொருளாகக் கருதப்பட்ட ஏலக்காய்க்கு வாசனைத் திரவியப் பொருள்களின் ராணி என்கின்ற புதிய அந்தஸ்து ஏற்படலாயிற்று!

இது பழங்கதை,

உலகத்தின் நாடுகளிலே இந்திய ஏலக்காயை விரும்பி வரவேற்காத நாடு எதுவுமே கிடையாது!

புதிய கணக்கு இது!

இப்படியாகத் தொன்றுதொட்டு உலக மக்களின் உள்ளந் தொட்டுப் பேரும் புகழும் ஈட்டிக் கொண்ட இந்திய ஏலக்காய் ராணி, நமது இந்திய நாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணி வருவாயைத் தற்போது ஈட்டித் தருவதிலும் உண்மையில் ராணி. யாகவே திகழ்கிறாள்!—திகழ்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/27&oldid=505927" இலிருந்து மீள்விக்கப்பட்டது