உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

விதைப்புக்கு உகந்த ஏல விதைகளாக அமையக்கூடும். 'கண்டுமுதல்' செய்யப்படும் ஏலக்காய்களிலிருந்து முற்றிப் பழுத்த வித்துறைகள் சேகரம் செய்யப்பட்டு, பின்னர், அந்த வித்துறைகளின் தோலை நீக்கி, விதைகளின் மீது உட்புறத்தில் படிந்துள்ள அழுக்கு, கறை முதலியவை நீங்கும்படி அவ்விதைகளைப் பிரித்துக் கழுவிச் சுத்தப் படுத்தவேண்டும். இவ்வாறு துப்புரவு செய்யப்பட்ட விதை மணிகளை மரச்சும்பலோடு கலந்து, 2 - 3 நாட்கள் வரை நிழலில் உலர்த்திக் காய வைக்கவேண்டும். 6 x 1 மீட்டர் அளவிலே ஏற்பாடு செய்யப்பட்ட பாத்திகளில் குறிப்பாக அக்டோபர் - நவம்பர் காலப் பிரிவிலே விதைகள் விதைக்கப்படும். விதைப்புக்குப் புத்தம் புதிய விதைகளே உகந்தவை; சிறந்தவை.

இப்படி விதைக்கப்படுகின்ற விதைகளினின்றும் 'முளை' அரும்பி நாற்று கிளம்பத் தொடங்கி, 6 - 8 மாதக் காலம் வரையிலும் முதல் நிலை நாற்றுக்கள் வளர்க்கப் படுகின்றன. பிறகு, பொதுவாக, ஜூன்-ஜூலை கெடுவில் முதல் நிலைப் பாத்திகளிலிருந்து அந்த நாற்றுக்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு இரண்டாம் நிலைப் பாத்திகளில் மீண்டும் நடவு செய்யப்படும். மறுபடி நடவு செய்யப்படுகின்ற நாற்று வரிசைகளுக்கும் பாத்திகளின் கரைகளுக்கும் இடையிலே சுற்றிலும் 9 x 9 அளவிற்கு இடைவெளி இருப்பது நல்லது.

பிறகு, மேற்கண்ட இரண்டாம் நிலை ஏல நாற்றுக்கள் 12 மாதங்கள் வளர்ந்தவுடன், அவற்றை மீண்டும் பிடுங்கி எடுத்து, அவற்றைப் பிரதானமான சாகுபடி வயலில் திரும்பவும் நடவு செய்தாக வேண்டும். இப்பணி, ஜூன் - ஜூலை காலக் கட்டத்தில், முக்கியமாக, பருவமழை ஆரம்பமான கையோடு நடத்தப்படுகிறது. இவ்வகைச் செயல்கள், பருவமழையின் மாறுதல் காரணமாக, கேரளம் - கர்நாடகம் - தமிழ்நாடு போன்ற மாநிலங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/30&oldid=505930" இலிருந்து மீள்விக்கப்பட்டது