பக்கம்:ஏலக்காய்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

இயற்கை அந்தக் காலத்தின் நிர்ணயத்திலிருந்து: இப்போது நிலை மாறித்தான் விட்டது.

இல்லையென்றால், பருவமழை காலம் தவறுமா?

தட்பவெப்பம் தடுமாறுமா? வெள்ளம் பெருகுமா?

காடுகள் அழிக்கப்படுமா?

இப்படிப்பட்ட அவலங்களும் தொல்லைகளும் மண்ணைச் சோதித்த காரணம் கொண்டுதான், மண்ணும் மக்களைச் சோதிக்க நேர்கிறது.

எனினும் —

இயற்கைத் தாய் புண்ணியவதி. பூமி அன்னை பொறுமைக்கு வடிவம். ஆகவேதான், மக்கள் இன்னமும் மண்ணை நம்புகிறார்கள்; மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள்!

ஒரு செய்தி!– ஏலக்காய் மண்ணுக்குப் பொதுவாக ஒரு குணம் உண்டு. உழவு நிலத்தில், நிலத்து மண்ணில் வெடியம் மற்றும் சாம்பரச் சத்துக்கள் அதிகமாகவும் எரியச் சத்துக்கள் குறைவாகவும் இருக்கும். ஆதலால், ஒவ்வொரு ஹெக்டேர் பரப்பு உடைய நிலத்திலும் 30 கிலோ வெடியம், 60 கிலோ எரியகக்காடி, 30 கிலோ சாம்பரம் என்கிற அளவு வீதத்தில் கலவை செய்து உரங்களாக உபயோகிக்கலாம். இச்செயல்முறை காரணமாகவே, மண் வளத்தின் குறை நிறைகள் சமம் அடைகின்றன. உரம் வைப்பது மே-ஜூன் மாதங்களில் முதல் சுற்று ஆகவும், செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சுற்று ஆகவும் அமைவது நலம் பயக்கும்.

அழகான நிழலை அழகாக விரும்பி, ரசனையோடு வரவேற்கும் நுண்ணிய உணர்வு கொண்டது ஏலச்செடி. இதனால்தான், நேரிடையான சூரிய வெளிச்சத்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/38&oldid=505942" இருந்து மீள்விக்கப்பட்டது