பக்கம்:ஏலக்காய்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகச்சுநோய்ப் பூச்சிப் புழுக்கள்! 6


ஏலக்காய்த் தோட்ட விவசாயத்தின் பொருளாதார மேன்மையை நிர்ணயிப்பதிலும் தீர்மானிப்பதிலும் திட்டமிடப்பட்ட சாகுபடி நடைமுறைகளின் உயிராதாரமாகவே பயிர்ப் பாதுகாப்புச் செயல்முறைகள் விளங்கும் . மனிதனை மட்டும் இயற்கை சோதிப்பது கிடையாது. அது ஏலக்காயையும் சோதிக்கும். விதியின் பொதுவிதி இது.

ஏலக்காய்க்கும் நோய் உண்டு. இது உடன்பிறவாத வியாதி.

நச்சுப் பூச்சிப்புழுக்கள் நுண்மங்கள் மற்றும் பற்றித் தொற்றிப் பரவும் நோய்க்கிருமிகள் ஏலக்காயை நோய் வாய்ப்படச் செய்கின்றன.

நோய் எனில், அதற்குக் காரண காரியங்கள் இல்லாமல் இருக்குமா?—இருக்கலாமோ?

ஏலம் விளைச்சல் செய்யப்படுகிற சாகுபடி வயல் மற்றும் நிலப்பரப்புக்களிலே நிலவிடும் வேளாண்மைத் தட்பவெப்ப நிலைகளில் ஏற்படும் மாறுதல்களின் காரணமாகவும், திட்டமிடாத வெவ்வேறு வகைப்பட்ட விவசாயப் பழக்க வழக்கங்களின் விளைவாகவும், அக்கறை இல்லாத செடி பாதுகாப்பு நடப்புக்களின் தொடர்பாகவும் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/42&oldid=505946" இலிருந்து மீள்விக்கப்பட்டது