பக்கம்:ஏலக்காய்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பாலான பயிர் விளைச்சல் பகுதிகளிலே பீடை நோய்க் கிருமிகள் தோன்றுகின்றன; பற்றியும் தொற்றியும் பரவுகின்றன. அத்துடன் நின்று விடுகின்றனவா? - அதுதான் இல்லை! அவை ஏலக்காயின் பெருமைக்கும் சிறப்புக்கும் வாய்த்திட்ட விதிச் சோதிப்பாக மாத்திரமன்றி, பயங்கரமான அச்சுறுத்தலாகவும் அமைந்து விடுகின்றனவே!

ஏலக்காய் நாற்றுப் பண்ணைகளிலேயே நோய்த் தாக்குதல்களுக்கு ஆரம்பவிழா நடத்தத் தொடங்கிவிடும். இந்த நச்சு நோய்க்கிருமிகள் ஏலத்தோட்டப் பண்ணைகளிலும் முற்றுகை களைத் தொடர்வதால் ஆண்டுதோறும். ஏற்படக் கூடிய விளைச்சல் நஷ்டங்களும் பாதிப்புக்களும் ஏல விவசாயிகளுக்கு நச்சுச் சோதனைகளாகவே அமைந்து விடுகின்றன! பயங்கரமான இத்தகைய சூழல்களில் நோய்களையும் நோய்ப் புழு பூச்சிகளையும் அடக்கி ஒடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் அவசரமும் அவசியமுமான முக்கியத்தைப் பெறுவதாகவும் அமைகின்றன!

நாட்டின் நல்லமைதியைச் சோதித்து வருகிற தேசவிரோதச் சக்திகளான பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மாதிரியே, அந்நியச் செலாவணியை, அதிக அளவிலே தாய்நாட்டுக்கு ஈட்டித் தருவதில் அன்றும் இன்றும் முக்கியத்துவம் பெற்றுத் திகழும் ஏலக்காயை நாற்று நிலையிலும் செடி நிலையிலும் தாக்கிச் சோதிக்கும் நச்சு நோய்ப் பூச்சிப் புழுக்களும் கிருமிகளும் பயங்கரமானவையாகவே ஏலக்காய்ச் சமுதாயத்தில் கருதப்படுகின்றன; அஞ்சவும் படுகின்றன.

பொதுவான இந்தப் புழுப் பூச்சிகள் மற்றும் நோய் நுண்மங்களில்தான் எத்தனை, எத்தனை வகைகள்!...

அந்துப்பூச்சி அந்துப்பூச்சி வகைகளின் முட்டைப் புழுக்கள் ஏலச் செடிகளின் வேர்களிலும், அடிநிலத் தண்டுகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/43&oldid=505947" இருந்து மீள்விக்கப்பட்டது