உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

ஊடுருவி, செடிகளின் அடிமுடிப் பாகங்களில் எல்லாம் கேள்விமுறை இல்லாமல் உட்புகுந்து பரவுவதால், செடிகள் வாடிவதங்கிச் சத்துக்களை இழக்கின்றன. செடிகளில் ஊடுருவிப் படரும் முட்டைப் புழுக்களின் ஆதிக்கத்தின் கெட்ட விளைவாகப் பரப்பப்படும் இவ்வகைத் தொற்றுநோய் பூஞ்சணக் காளான் நோயாகி. செடித் தொகுதிகள் அழுகிவிடுகின்றன. மேலும், அடிநிலத் தண்டுகளில் ஆரம்பமாகும் இந்நோய், அதன் ஆரம்பக் கட்டத்திலே ஏலச்செடிகளையே அழித்துவிடும் சக்தி கொண்ட இப்புழுக்கள் ஏப்ரல் கெடுவில் முதற் பருவமழை ஆரம்பமானவுடன் வெளிக் கிளம்பி 7, 8 மாதங்களே உயிர் வாழும்.

ஆகவே, மேற்கண்ட அந்துப்பூச்சி இனங்களின் முட்டைப் புழுக்களைத் தடுத்துக் கட்டுப்படுத்த, இளமை மிக்க ஏலச் செடிகளின் அடிப்பகுதிகளிலே வீரியம் மிகுந்த பி. எச். சி. மருந்துக் கலவையை 2% அளவிலும், ஆல்ட்ரின் அல்லது, க்ளோர்டென் பூச்சி மருந்துச் சேர்க்கையை 1% விதத்திலும் தெளிப்பது அவசியம். நான்கு வாரங்கள் கழிந்த பிற்பாடும் மேற்கண்ட தொற்று நோய்ப் பூச்சிகளின் நடமாட்டம் தோட்டப் பண்ணைகளில் தென்படுமேயானால், மேற்கண்ட கருத்துக் கலவைகளை மேற்சொன்ன அளவு விகிதத்தில் மறுமுறையும் தெளிக்கலாம்!


அடுத்த ரகம் - கம்பளிப்புழுக்கள்

இவை செடிகளின் வெளிப்புறத்தண்டின் மையப் பகுதியைத் துளைத்துச் செடிகளைச் சத்து இழக்கச் செய்வதன்மூலம் பட்டுப் போய்விடவும் செய்கின்றன. கோடைக்காலத்தில், குறிப்பாக, டிசம்பர் முதல் மே வரை இவற்றின் பாடு கொண்டாட்டம்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/44&oldid=505949" இலிருந்து மீள்விக்கப்பட்டது