பக்கம்:ஏலக்காய்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சாறு உறிஞ்சிப் புழுப்பூச்சிகள் மிகப் பயங்கரமானவை. செடிகளைத் தாக்கி, மகசூலையும் பாதித்து ஏலச் சாகுபடியையே அச்சுறுத்தும் இவை இலைத் தொகுதிகளின் பரப்புக்களில் அவற்றின் மேலுறைப் பகுதிகளில் உயிர் வாழ்ந்து, செடிகளிலே பொதிந்திருக்கும் சத்து நீரை உறிஞ்சி உண்ணும் சக்தி கொண்டு விளங்கும். நீண்ட வடிவ அமைப்புடன் சாம்பல் பழுப்பாகவும் வெளிர் மஞ்சளாகவும் வெகு நுட்பமாகவே காட்சியளிக்கும் இவை 27 - 30 நாட்கள் மட்டிலுமே மண்ணில் உயிர் தறிக்க முடியும். சொறிப்பேன் இனத்தைச் சார்ந்த இவை ஏலக்காய் விதை உறைகளின் மேற்புற இழைமங்களைக் கீறிக்கிழித்து, அவற்றின் ரசத்தை லாவகமாக உறிஞ்சிச் சுவைத்துக் குடித்து விடுவதால், வித்துறைகளின் மேற்பகுதிகளில் தழும்புகள் உண்டாகின்றன; அவை அசல் சொறிசிரங்குகள் மாதிரியே உருவாகும். ஏலக்காய்களின் அமைப்பு அலங்கோலமாக உருமாறும். நெற்றுகளிலுள்ள விதைகளின் சத்து உறிஞ்சப்பட்டு விடுவதால், அவற்றிற்கு முளைவிடும் திறனும் குறைய நேரும். பூக்காம்புகளைத் தாக்கும்போது, அவை உதிர்ந்து விழவும் ஏதுவாகிறது. த்ரிப்ஸ் பூச்சிகள் உண்டுபண்ணும் சேதம் 80 - 90 சதவீதமாகவும் உயரலாம், டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இவை திரள் திரளாகத் தோன்றும்.

சாறு உறிஞ்சிப் பூச்சிப் புழுக்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், 'ஏலாக்ஸ்-க்வினால்ஃபஸ்' மருந்தை ஆற்றல் மிக்கதாக 0.05 சதவீத அளவில் கலவை செய்து தெளிக்க வேண்டும். 'ஃபான்டல்' மற்றும் 'ஸெவின்' வகைகளும் சாரம் மிகுந்தவைதாம்.

பூச்சி நாசினி ரசாயன மருந்துகளை பூங்கொத்துக்கள், செடித் தொகுதிகளின் கீழ்ப்பாகங்கள் ஆகியவற்றில் கவனத்துடன் தெளிப்பது அவசியம். தூள்வடிவிலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/47&oldid=505952" இலிருந்து மீள்விக்கப்பட்டது