பக்கம்:ஏலக்காய்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

முதல்வகைத் துளைப்பான் பூச்சிகள். இரண்டாம் ரகத் துளைப்பான் பூச்சிகள் விதை உறைகளைத் துளைத்து, உள்ளே அடங்கியிருக்கும் விதை மணிகளைப் புசித்து உயிர் வாழும். இந்நிலையில், மேற்கண்ட வித்துறைகளில் சாஸ்திரத்துக்குக் கூட ஒருமணி விதையும் மிஞ்சாது!

இருவகைத் துளைப்பான் பூச்சிகள் தாக்கிய செடிகளைத் துாருடன் பெயர்த்து எடுத்து அழித்து விடுவது நல்லது.

தடுப்பாற்றல் முறையின் கீழ், 'குவினால் ஃபாஸ்எகாலஸ்' மருந்தை 1% அளவில் மாதாந்தர இடைவெளிகளில் தெளித்தல் வேண்டும்.

இந்தத் துளைப்பான் பூச்சிகள் பலவகையான உணவுகளைத் தின்னும் பழக்கம் உடையவை. ஆதலால், ஏலத் தோட்டங்களில் ஏலச்செடி சார்ந்த இஞ்சி, மஞ்சள் போன்ற செடிகள் வளர்ந்திருந்தால், அவற்றையும் அப் புறப்படுத்திவிட்டால், பூச்சிகளின் தொகை கணிசமாகக் குறையவும் நியாயம் உண்டு.

துளைக்கும் வண்டுகள்

'துளைக்கும் வண்டுகள்' பிறிதொரு ரகம், நீள் உருளை வடிவு: பழுப்பு நிறம்: உடம்பு பூராவும் ரோமக்காடு. இவற்றிற்கும் ஏலவிதைக் காய்கள் என்றால் வெகுபிரியம். 'ரோகர்' போன்ற மருந்து இவற்றையும் கட்டுப்படுத்தும்.

'வெள்ளை ஈக்கள்' என்று ஒரு புதியவகை நச்சுப் பூச்சியும் தற்போது புதிதாகத் தோட்டப்புறங்களில் பதிவாகியிருக்கிறது. இலைகளைத் தின்று வாழக்கூடிய இவை வறட்சிப் பருவங்களில் செழிப்போடு நடமாடும். டெமக்ரான் பூச்சிநாசினியை 0.05% என்னும் வீத அளவில் பயன்படுத்துவதால், நோய் கட்டுப்பட்டுப் பயன் கிட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/49&oldid=505954" இருந்து மீள்விக்கப்பட்டது