பக்கம்:ஏலக்காய்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நச்சுநோய்ப் பூச்சி நோய்கள்!


நச்சு நோய்ப் பூச்சிகளைத் தவிர, நச்சுப் பூச்சி நோய்களும் ஏலக்காயைச் சோதிக்கும்! ஏலக்காய், சோதிப்புக்கு உள்ளானால், உற்பத்தி சோதிக்கப்படுவது இயற்கை. உற்பத்தி, சோதனைக்கு இலக்காகும் பட்சத்தில், நாட்டின் தேசிய வருமானமும் சோதனையின் உயிர்க்கழுவில் ஊசலாடாமல் தப்புவது இல்லை தானே?

ஆதலால்:

ஏலச் சாகுபடியின் ஒழுங்குக் கட்டுப்பாடுகளில், நச்சுப் பூச்சி நோய்களின் தடுப்புச் செயல்வினைகள் கண்ணும் கருத்துமாக மதிக்கப்படுகின்றன.


ஈரடி நோய்

விதை விதைத்து. நாற்றுப் பறித்து, இரு நிலைப்பட்ட நாற்றுப் பண்ணைகளிலே ஏலச்செடிகள் வளர்கின்ற போதும், பின்னர் அவை தாய்வயலுக்கு மாற்றப்பட்டு மறுநடவு செய்யப்பட்டு வளர்ச்சி அடைகின்றபொழுதும் இந்த நோய் மழைக் காலத்திலேயே பரவும் தன்மை உடையது. போதுமானதும் தேவையானதுமான தண்ணிர் வடிகால் வசதிகள் இல்லாவிட்டாலும், நாற்றங்கால்களிலே நாற்றுக்கள் விவசாயச் சட்டத்தை மீறி கும்பல் கும்பலாக நடப்பட்டாலும், மண்ணின் பரப்பில் ஈரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/51&oldid=506017" இருந்து மீள்விக்கப்பட்டது