49
அத்துமீறித் தங்கவும் தேங்கவும் நேருவதாலும், ஈரடி நோய் உண்டாகும்.
'பிதியம்' என்னும் துணுக்கமான பீடை நோய்க் கிருமிகளால் பூஞ்சண் நோயின் சார்பில் தோன்றும் இந்நோயால் தாக்கப்படும்போது, தண்டும் வேரும் சந்திக்கும் செடிப்பகுதிதான் முதன் முதலில் பாதிக்கப்படும். உடன், இலைகள் 'சோகை' பிடித்த பாவனையில் மஞ்சள் பூத்து, நாற்றுக்களும் சரி, இளஞ்செடிகளும் சரி உணங்கி - வதங்கி விடும். வேரும் தண்டும் கூடும் பகுதியிலுள்ள 'திசுக்கள்' — நரம்புகள் மற்றும் அடிநில வேர்த்தண்டும் அழுகிவிடவே, நாற்றுக்கள் உயிர் இழந்து பயனற்றுப் போய்விடும்.
ஆகவே, வடிகால் முறை செம்மைப் படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகிறது. பாத்திகளிலே விதைகள் நெருக்கம் இல்லாமல், இடைவெளிகளுடன் விதைக்கப்பட வேண்டும். அப்போதுதான், நாற்றுக்கள் கலகலப்பாக வளரமுடியும். மழைப்பருவத்தில் தாற்றுப் பண்ணைப்படுகைகளிலே ஒருசதவீத அளவிற்கு 'போர்டோ' கலவை மருந்தைத் தெளிக்கலாம்; அல்லது, அக்கலவையை ஊற்றியும் வைக்கலாம். இத்தகைய கட்டுப்பாட்டு முறைக்கு இணங்காமல் ஈரடி நோய் தீவிரம் அடைந்தால், நோய்வாய்ப்பட்ட நாற்றுக்களை - அல்லது இளஞ் செடிகளை வேரோடு பிடுங்கி எட்டத்தில் வீசி எறிந்து விடலாம். நோய்த்தடம் காணப்படும் இடங்களில் பூஞ்சணக் காளான் கொல்லி வேதியியல் கலவை மருந்தையும் உடன் தெளிப்பதும் விவேகமான காரியமாகவே அமையக்கூடும்.
இலைப்புள்ளி நோய்
மூலகாரணமாக 'ஃபிலோஸ்டிக்டா—எலெட்டேரியா சவுத்' என்ற விசித்திரப் பீடைக் கிருமிகள் விளங்குகின்றன. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் நாற்றுக்கள்